“சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்” – மாத்தளையில் கவனயீர்ப்பு பேரணி

“ சகல உரிமைகளையும் உள்ளடக்கிய மலையகம்” எனும் தொனிப்பொருளின்கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு  காணி உரிமை,வீட்டு உரிமை,மொழி உரிமை அரசியல் உரிமை அடங்களாக தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு, பெண்களுக்கான உரிமை ஆகயவற்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.”

இவ்வாறு அரசாங்கம் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கவன ஈர்ப்பு நடவடிக்கையை சமூக அபிவிருத்தி நிறுவகம் மாத்தளை நகரில் சனிக்கிழமை (22) நடத்தியது.

இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் கல்வி மான்கள், சிவில் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் ஏந்தி தங்களின் உரிமைகளை வலியுறுத்தி மாத்தளை பிரதான நகரில் பேரணியாக வந்தனர்.

இதையடுத்து அங்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் பி.முத்துலிங்கம் தலைமையில் பொதுக்கூட்டமும் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles