சிறிய ரக விமான அனர்த்தம் தொடர்பில் கைதான சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சக்குராய் நிறுவனத்துக்கு சொந்தமான சொந்தமான செஸ்னா 172 ரக விமானமொன்று அண்மையில் சீகிரியாவிலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, கட்டான – கிம்புலாப்பிட்டி பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானது.
இதன்போது, அதில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சக்குராய் ஏவியேஷன் லிமிடட் நிறுவனத்தின் அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும், உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த சிவில் விமான சேவைகள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்தது.
அத்துடன், சக்குராய் நிறுவனத்துக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி, பயாகல கடற்கரை பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










