தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்டில், தோல்வியை சந்தித்திருந்தாலும் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்து விராட் கோஹ்லி அசத்தியுள்ளார்.
ஒரு காலண்டர் ஆண்டில் 2000 ஓட்டங்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில் 6 தடவைகள் 2000 ஓட்டங்களை கடந்திருந்த குமார் சங்ககரா சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு 2012 (2186 ஓட்டங்கள்), 2014 (2286 ஓட்டங்கள்), 2016 (2595 ஓட்டங்கள்), 2017 (2818ஓட்டங்கள்), 2018 (2735 ஓட்டங்கள்), 2019 (2455ஓட்டங்கள்) என 6 முறை 2000 ஓட்டங்களை குவித்திருந்த விராட் கோஹ்லி இந்தாண்டு 2006 ஓட்டங்கள் கடந்து, 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேவேளை, தென்னாப்பிரிக்க மண்ணில் சச்சின் 38 போட்டிகளில் 1724 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில், 29 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோஹ்லி 1750 ஓட்ட்கள் குவித்து தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.










