ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் சிறிகொத்தவில் கூடியது.
இதன்போது பிரதித் தலைவர் பதவிக்கு ருவான் விஜேவர்தன, ரவிகருணாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ருவானுக்கு ஆதரவாக 28 பேரும், ரவிக்கு ஆதரவாக 10 பேரும் வாக்களித்துள்ளனர். இதன்படி பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய அரசியல் கட்சியின் தலைவராக செயற்படுகின்றார். இந்த இடத்துக்கே ருவான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை 2021 ஜனவரிவரையில் தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார்.