தனது கல்வித் தகைமை தொடர்பான அனைத்து சான்றிதழ்களும் நாளை (18) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
சஜித்தின் கல்வித் தகைமை தொடர்பிலும் அரசியல் களத்தில் கேள்விகள் எழுப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் ஆளுங்கட்சியால் சபையில் இன்று வினவப்பட்டது.
இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சி சஜித் பிரேமதாச,
” எனது கல்வித் தகைமைகள் தொடர்பான அனைத்து சான்றிதழ்களும் நாளை சபையில் முன்வைக்கப்படும்.” – என்றார்.