சஜித் பிரேமதாச தனது தவறுகளை சரிசெய்துகொள்ளாவிட்டால், அவரை கைவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ரணிலுடன் சங்கமிக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும். கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது குறைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடடால் எமது பக்கம் இருப்பவர்கள் சஜித்தை கைவிட்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையக்கூடும்.
எனக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிக்க எதிர்பார்க்கின்றேன். சஜித் தன்னை பலப்படுத்திக்கொண்டால் பிறரின் உதவிகள் தேவைப்படாது.” – என்றார் ஹிருணிக்கா.










