ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி, அவருக்கு அரசியல் ரீதியில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கொழும்பு, , ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் மத அனுஷ்டானம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணி வைத்துள்ள மனோ கணேசன் மற்றும் திகாரம்பரம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதிகளாகவே அவர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியின் சிறந்த முன்னேற்றமாக இது கருதப்படுகின்றது.










