சஜித்துடன் இணைந்தது ஏன்? ஷான் விஜயலால் விளக்கம்

” மக்கள் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் பயணிக்கும் இந்த அரசை மாற்ற வேண்டும். அதற்காக பாரியதொரு அரசியல் சக்தி அவசியம். அதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையுடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும், தற்போதைய அரசை மாற்றுவதற்கு மக்கள் சக்தி அவசியம். மக்கள் ஆதரவு சஜித்துக்கு உள்ளது. எனவேதான் இந்த பொது பயணத்தில் நானும் இணைந்தேன்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் இணைவார்கள் என நம்புகின்றோம்.

தற்போதைய அரசு மக்கள்மீது சுமைகளை திணிக்கின்றது. மக்களின் கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படவில்லை. மாற்றமொன்று அவசியம். அதனை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles