சஜித்துடன் சங்கமித்த விஜித் விஜயமுனி சொய்சா சுயாதீனமாக செயற்பட முடிவு

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தீர்மானித்துள்ளார்.

தனக்கு இன்னும் அமைப்பாளர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை, கட்சி உறுப்புரிமை மட்டுமே உள்ளது, தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளேன் என்று விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அமைச்சு பதவி வகித்த விஜித் விஜயமுனி சொய்சா, அதன்பின்னர் மைத்திரி தரப்புடன் இணைந்தார். பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும், நாடாளுமன்றம் தெரிவாகவில்லை.

இந்நிலையிலேயே அவர் சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles