சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எனவே,எதிர்வரும் 08 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என வெளியாகும் தகவலையும் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.