சஜித்தை ஆதரித்த உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தார் ரணில் – முற்போக்கு கூட்டணியும் கலக்கத்தில்!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ள தமது கட்சி உறுப்பினர்கள் 115 பேரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (28) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

இதன்போதே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடும் 54 முன்னாள் எம்.பிக்களையும், பிரச்சாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் 61 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களையும் நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்ட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை நீக்குவது சம்பந்தமாகவும் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.

இதன் முதற்கட்டமாகவே தமது கட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்களை ஐ.தே.க. நீக்கியுள்ளது. ஏனையோரை நீக்குவது சம்பந்தமாக சட்டரீதியாக ஆராயப்பட்டுவருவதாக சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles