ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், தொகுதி அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகிய இருவருமே, கட்சியில் வகிக்கும் பதவிகள் மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இவ்வாறு விலகியுள்ளனர்.
இது தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு தெரிவுப்படுத்தி நேற்று கடிதமும் அனுப்பிவைத்துள்ளனர்.
வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடரின்போது இவ்விருவரும் அரசுடன் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.