மே தினக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு இடமளிக்கும் வகையில் கட்சிக்குரிய பங்களிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வழங்கி இருக்கவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் பொன்சேகா பங்கேற்றாலும் அவருக்கு உரையாற்ற இடமளிக்கப்படவில்லை. கட்சியின் தவிசாளராக அவரே தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றார்.
இந்நிலையில் பொன்சேகாவுக்கு ஏன் உரையாற்ற இடமளிக்கப்படவில்லை என எழுப்பட்ட கேள்விக்கு,
“ அவர் கட்சியை விமர்சித்துவருகின்றார், மே தின கூட்ட ஏற்பாட்டுக்கு பங்களிப்பும் வழங்கவில்லை. எனவே, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சி கட்டமைப்புக்கமைய அவர் செயற்படவில்லை. அவருக்க உரையாற்ற வாய்ப்பு வழங்குவது ஏற்புடைய நடவடிக்கையும் அல்ல” –என்று சுஜிவ சேனசிங்க பதிலளித்தார்.










