” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறங்காவிட்டால் அரசியலில் இருந்தும் நான் ஓய்வுபெறுவேன்.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறங்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம். சஜித் பிரேமதாச போட்டியிடாவிட்டால் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறுவேன்.
அநுரகுமார திஸாநாயக்க அரசியலில் தூய்மையானவர் எனக் கூறப்படுமானால் அந்த கருத்தை ஏற்க முடியாது. அவர்களும் அரசுகளில் அங்கம் வகித்தவர்கள். ஜே.வி.பியினரால் ‘பைல்’களை மாத்திரமே வெளிப்படுத்திகொண்டிருக்க முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தமை கவலை இல்லை. நான் மகிழ்ச்சியாகவே இருக்கின்றேன்.” – என்றார்.
