எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இனி அரசியல் பயணம் செய்யபோவதில்லை. அவர் பயணிக்கும் அரசியல் வழி தவறானது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து என்னை சட்ட ரீதியாக நீக்க முடியாது. என்னை நீக்ககூடாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே, கட்சியின் தவிசாளர் பதவிக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் விடயமாகவே அமையும்.
சஜித் பிரேமதாச அவரின் தந்தையை வைத்து அரசியல் நடத்துகின்றார். இப்படியான அணுகுமுறை சரியில்லை என அவரிடம் நேரில் குறிப்பிட்டுள்ளேன். எது எப்படி இருந்தாலும் சஜித் பிரேமதாசவுடன் இனி அரசியல் செய்யபோவதில்லை.
தனிப்பட்ட ரீதியில் எவ்வித பிரச்சினையும் கிடைகாது. ஆனால் அவரின் அரசியல் பயணத்தை என்னால் அனுமதிக்க முடியவில்லை.” – என்றார்.
