சஜித் – ரணிலை சங்கமிக்க வைக்க வெளிநாடுகள் முயற்சி!

ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சித்துவருகின்றன – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“சஜித் ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற கோரிக்கையுடன் இதற்கான ஏற்பாடு இடம்பெறக்கூடும். அதேபோல ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டில் ஒன்று நடக்கலாம்.  அது நடக்காமலும் போகலாம். ஆனால் அதற்கான முயற்சி இடம்பெறுகின்றது.

பூகோள அரசியலில் அமெரிக்காவும், இந்தியாவும் இன்று இணைந்து செயற்பட்டுவருகின்றன.” – என்றார்.

Related Articles

Latest Articles