தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹோமாகமயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாட்டிற்கு வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தற்போது, சமூகம் கொலைகாரர் களின் பிடியில் சிக்கியுள்ளது. எந்தநேரத்தில் எங்கு என்ன நடக்கும் என தெரியாதுள்ளது.
சட்டத்தின் ஆட்சி பறிபோய்விட்டது. அரசாங்கத்திடம் சட்டம் ஒழுங்கை பேணு வதற்கான தேசிய திட்டமொன்று இல்லை. பிரஜைகளின் வாழ்வுரிமையை உறு திப்படுத்துவதும், சட்டத்தை அமுல்படுத் துவதும், மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதும் அரச தலைவரின் பொறுப்பாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எழுதிய கடிதத்தால், அமெரிக்கா விதித்த தீர்வை வரி 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் ஒருவர்தெரிவித்திருந்தார்.
பின்னர் வேறொரு தூதுக் குழு,அமெரிக்கா பயணமாகி, கலந்துரையாடல்கள் எமக்கு சாதகமாக இறுதி செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
இந்த வரியைத் திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இருந்த போதிலும், அவ்வாறானஅறிக்கை எதுவும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.” என்றார்.