புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக சட்டப்போர் தொடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
இது தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் உள்ள ஜனநாயக விரோத அம்சங்கள், நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.
அதற்கு மேலதிகமாக புதிய சட்டத்தை தோற்கடிப்பதற்கு மக்கள் சக்தி அணிதிரட்டப்படும்.” – என்றார் சஜித்.










