சட்டமா அதிபர் அலுவலகத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மின் நூலகத்தின் பெயர் பலகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழியை சீன அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இலங்கையின் சட்டத்தை பாதுகாக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைமை சட்ட அலுவலகத்திலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டால் தமிழ் மொழிக்கு இலங்கையில் உள்ள அங்கீகாரம் என்னவென்றே கேள்வியெழுகிறது.
இது தொடர்பாக அறிந்த இதொகாவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், உடனடியாக நீதி அமைச்சர் அலி சப்ரியைதொடர்பு கொண்டு, இதற்கான உடனடி நடவடிக்கையை எடுத்து தமிழ் மொழி புறக்கணிப்பை நிவர்த்தி செய்யுமாறு வேண்டுகோள்
விடுத்தார்.
உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் செந்தில் தொண்டைமானிடம் உறுதியளித்தார்.











