சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்த 137 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி நிஹால் தத்துவ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொண்ட 429 சுற்றிவளைப்புகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்த சுற்றிவளைப்புகளில் 27 ஆயிரம் லீற்றர் பெற்றோலும், 22 ஆயிரம் லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.