பண்டாரவளையை அண்மித்த பகுதியில், சட்டவிரோதமாக மாடுகள் அறுக்கப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யுமிடமொன்றினை பண்டாரவளைப் பொலிஸார் இன்று (03-11-2020) சுற்றிவளைத்தனர்.
இதன்போது விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 41 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சியைக் கைப்பற்றியதுடன், மூன்றுபேரையும் கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளையை அண்மித்த கித்தலெல்ல என்ற இடத்திலேயே, மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து,மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ,நீண்டகாலமாகவிருந்தே, இவ்விடத்தில் சட்டவிரோதமாக மாடுகள் வெட்டப்பட்டு, இறைச்சி விற்பனைசெய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர்,பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,பண்டாரவளைகுற்றத்தடுப்புபொலிஸ் பிரிவுபொறுப்பாளர் அபேகுணவர்தன தெரிவித்தார்.
எம். செல்வராஜா பதுளை