சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்களுடன் நல்லத்தண்ணி நகரில் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நல்லத்தண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது , வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் 11 வும், 500 ரூபா நாணயத் தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர், ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தஉள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
