” சண்டைக்கோழிக்கு எந்த களமும் தயார்தான். அடுத்து எந்த தேர்தல் நடந்தாலும் எமது கூட்டணி போட்டியிடும்.” – என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
” ராஜபக்சக்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம். ஊழல், மோசடி, கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் கப்பலில் ஏற்றி அனுப்புவோம்.
ஒருவராகவந்துதான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். ஆனால் நான் தொழிற்சங்க தலைவராக செயற்பட்டுள்ளேன். சிறந்தவர்கள் எம்முடன் உள்ளனர்.
சண்டை கோழிக்கு எந்த களமாக இருந்தாலும் தயார்தான். எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயார்.” – எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
