ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண் போட்டியில் 131 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி வீரர் சண்முகநாதன் ஷாருஜன் சதமடித்து அசத்தினார். 132 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 102 ஓட்டங்களைப் பெற்றார்.