சந்திரிக்காவுக்கு சு.கவில் உயர் பதவி?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் ஆரம்பக்கட்ட பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன எனவும் அறியமுடிகின்றது.

இந்த யோசனையை ஏற்க தற்போதைய கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், அவர் சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

எனினும், மைத்திரிபால சிறிசேன கட்சியில் இருக்கும்வரை, சுதந்திரக்கட்சி எழுச்சி பெறாது என மைத்திரி தொடர்பில் சந்திரிக்கா அம்மையார் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றார். எனவே, மைத்திரியின் தலைமையின்கீழ் அவர் பதவியொன்றை ஏற்பாரா என்பது கேள்விக்குறியே.

Related Articles

Latest Articles