எதிர்வரும் வாரங்களில் ஸ்ரீ சபரிமலை யாத்திரைக்கு செல்லும் ஐய்யப்ப பக்த சுவாமிகளுக்கு, அவர்களின் பயணச்சீட்டில் சலுகைகளை பெற்றுத்தரும் நோக்கில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் , விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V சானக்க டினுஷானுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் D.V சானக்க ஸ்ரீ சபரி மலைக்கு செல்லும் பக்த சுவாமிகளுக்கு, அவர்களின் பயணச்சீட்டில் சலுகைகள் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறியவிரும்பும் ஐய்யப்ப சுவாமிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பிரத்தியோக உதவியாளர் தயாளன் அவர்களை தொடர்புக்கொள்ளவும்.( 070530000)
