சபை அமர்வில் பங்கேற்குமாறு சஜித் அணிக்கு சபாநாயகர் அழைப்பு!

” சபை அமர்வில் பங்கேற்குமாறு எதிரணி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.” – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபையில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசேட குழு நாளை பெயரிடப்படும் எனவும் அவர் கூறினார்.

குழுவில் அங்கம் வகிக்க ஒரு தரப்பு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் மற்றைய தரப்பின் இணக்கத்தையும் இன்று பெறவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முதல் சபை அமர்வை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles