தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை ” நீங்கள் ஒரு ஏமாற்று அரசியல்வாதி.” – என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு கடந்த 17 ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெற்றது.இம்மாநாட்டில் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோவும், சாணக்கியனும் பங்கேற்பார்கள் என ம.ம.மு. அறிவித்திருந்தது.
எனினும், இருவருமே நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இன்று பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன்போது சபை வளாகத்தில் வைத்து இராதாகிருஷ்ணனை சந்திப்பதற்கு சாணக்கியன் சென்றுள்ளார் எனவும், இதன்போது ஏமாற்று அரசியல் வாதிகளுடன் தான் கதைப்பதில்லை எனக்கூறி ராதாகிருஷ்ணன் சீற்றத்துடன் சென்றார் எனவும் ம.ம.மு. வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
தகவல. – நீலமேகம் பிரசாந்த்
