சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மீண்டும் பூட்டு!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வைத்தே இன்று அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி வந்துள்ளோம்.

எனினும், மூன்றாவது கப்பல் இலங்கைக்கு வந்துள்ளபோதும், அதற்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles