சப்ரகமுவ மாகாணத்தில் தோட்டப்பகுதி மாணவர்கள் சிறந்த பெறுபேறு!

2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்  சப்ரகமுவ மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 28 ஆயிரத்து 631 மாணவர்களில் 19 ஆயிரத்து 113 பேர் சித்தியடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வித்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி 9 ஆயிரத்து 518 பேர் இப்பரீட்சையில் சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க இம்முறை இம்மாகாணத்தில் இப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த தோட்டப்பகுதி மாணவர்களில் எண்ணிக்கையானது கடந்த வருடத்தை விட அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு, சூம் தொழிற்நுட்பத்தினூடாக நிகழ்நிலை வகுப்புக்களே கூடுதலாக நடைபெற்றன.

இவ்வாறான சூழ்நிலையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தோட்ட மாணவர்களுக்குத் தொலைப்பேசி வசதிகள் மற்றும் அதற்கான சிக்னல் வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் இல்லாத நிலையிலும் தோட்ட மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இது வரவேற்கக்கூடியது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தகவலின்படி பெல்மதுளை நீலகம தமிழ் வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 23 மாணவர்களில் 14 பேர் சித்தியடைந்துள்ளனர்.

கீரைகலை தமிழ் வித்தியாலத்திலிருந்து தோற்றிய 10 மாணவர்களில் 8 மாணவர்கள் உயர் தரம் கற்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியலாயத்திலிருந்து தோற்றிய 30 மாணவர்களில் 18 பேர் சித்தியடைந்துள்ளனர்.

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 81 மாணவர்களில் 25 மாணவர்கள் கணித பாடத்துடன் சித்தியடைந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles