ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
தற்போதைய ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வெளிநாடு சென்றிருப்பதால், அவர் நாடு திரும்பிய பின்னர் புதிய நியமனம் இடம்பெறும் என தெரியவருகின்றது.
நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்தார். இதன்படி மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.
இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
