சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடுவதை தவிர்க்கவும்

பலாங்கொடை சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடுவது முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்துள்ளது. இதனால் நீர்க்கசிவைத் திருத்தும் பணிகள் நடைபெற்றுவருவதால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் கீழ் உள்ள நீர்நிலைகளில் நீராடுவதை தவிர்த்துகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுகின்றனர்.

நீர்வற்றியுள்ள சிறிய நீர்நிலைகளில் உள்நாட்டு சுற்றாடல் பயணிகள் நீராடுவதுடன் நடமாடுவதையும் தமது பொழுதுபோக்குகளாக கொண்டுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் ஏனெனில் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீர்க்கசிவை திருத்தும் போது தேங்கியுள்ள நீர் பள்ளத்தாக்கை நோக்கி பாயும் ஆபத்தான நிலை இருப்பதால் இவ்விடங்களில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles