சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை – வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மதச் சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles