சமஷ்டி தீர்வு குறித்து சம்பந்தனின் வீட்டில் நாளை மந்திராலோசனை!

சமஷ்டியே என ஒரு குரலில் பேச வாருங்கள் எனத் தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

“வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் எமது மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில் கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

இதற்காக நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 15ஆம் திகதி) மாலை 5.30 மணிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் ஒன்றுகூடுமாறு கட்சித் தலைவராகிய உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு நீங்கள் சமுகம் தருவீர்கள் என்று நம்புகின்றோம்” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles