சமூக நீதிக்கான பயணம் தொடரும்: வேலுகுமார்!

சமூக உரிமை மற்றும் சமூக நீதியை மையப்படுத்தியதாகவே எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் அமைந்தது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாவிட்டாலும் மேற்படி இலக்கை நோக்கிய அரசியல் பயணம் தொடரும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்கள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 ஆம் ஆண்டு எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது. இரு தடவைகள் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு தலைமைத்துவம் வழங்கினேன். சமூக நீதி மற்றும் சமூக உரிமைகளை மையப்படுத்தியதாகவே எனது நடவடிக்கைகள் அமைந்தன. பாராளுமன்றத்திலும் உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசி உள்ளேன்.

அதேவழியில் எனது பயணம் தொடரும். அந்த பயணத்தை மேற்கொள்வதற்கு, இலக்கை அடைவதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் துணிந்து செயற்படுவேன்.
கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதில் சில அரசியல் முகவர்களே முன்னின்று செயற்பட்டனர். தோட்டங்களுக்கு சென்று, வாக்குகளைக்கூட விலைபேசினர். பணபலத்தைக் காட்டினார்கள். வதந்திகளை பரப்பினார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பலர் வாக்களிப்பதற்குகூட செல்லவில்லை. அந்த அரசியல் முகவர்கள் யாரென்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் தற்போது காணாமல்போய்விட்டனர்.
என்மீது நம்பிக்கை இருந்ததால்தான் இரு தடவைகள் மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். அதே நம்பிக்கை இன்றளவிலும் உள்ளது. உண்மை ஒரு நாள் வெல்லும் என்பார்கள், எனவே, உண்மை என்னவென்பது மக்களுக்கு தற்போது புரிக்கின்றது. ஆகவே மக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்.” – என்றார் வேலுகுமார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles