லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட நிலையில், விலை அதிகரிப்பதில் இன்று திடீர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலையை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 2,675 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலையை 30 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிலிண்டரின் புதிய விலையாக 1,071 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 14 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிலிண்டரின் புதிய விலை 506 ரூபா என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.










