இந்த நெருக்கடி நிலையில் ஒரு வருடத்துக்கு தனது எம்.பி சம்பளம் வேண்டாமென்றும் பாராளுமன்றத்தினால் வழங்கும் உணவு தேவையில்லையென்றும் ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்ப இருப்பதாக தெரிவித்த அவர் பிரச்சினைக்கு தீர்வு காண பல மாற்றுவழிகளுள்ளன.
மக்கள் கஷ்டப்படுகையில் எமக்கு இரண்டரை இலட்சத்தினால் பயனில்லை. எமது பதவிகளை பாராது மக்களுடன் இணைந்து கஷ்டப்பட முடியுமாக இருந்தால் கிராமத்திற்கு செல்லமுடியும். அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.