ஜனாதிபதிக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்டக் கொடுப்பனவுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெறவில்லை எனத் தெரியவருகின்றது.
தனக்கு இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பான நிதியத்துக்கு ஒதுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
நூலகம் திறப்பு, நலன்புரி சேவை, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட விடயங்களுக்கு மேற்படி நிதியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டுவருகின்றது. அந்நிதியத்துக்கே தனக்கான கொடுப்பனவுகளை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார் என தெரியவருகின்றது.
இந்நிதியத்தின் ஊடாக சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏதேனும் தடை ஏற்படின், அதற்கு தேசிய மக்கள் சக்தியின் செந்தாரகை அணியின் ஆதரவை பெறுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
