” பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, சம்பள உயர்வு வழங்குமாறு கோரி மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம், அவசரகால சட்டத்தை பயன்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.










