சம்பள உயர்வு விடயத்தில் துரோகம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மலையக அமைச்சரும் ஜனாதிபதியும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெருந்தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு விடயத்தில் மீண்டுமொரு முறை ஏமாற்றப்பட்டுள்ளனர். 1700 ரூபா சம்பள உயர்வு என தொழிலாளர் தின வாக்குறுதியாக கூறி வர்த்தமானி வெளியிட்டு கொண்டாடி, தற்போது 1350 ரூபாவிற்கு மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து விட்டனர். இது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும்.ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் இதற்கான பதிலை கட்டாயமாக வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்

Related Articles

Latest Articles