மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ஆராய்வதற்கு சம்பள நிர்ணயசபை இன்று (10) கூடி இருந்தாலும் அக்கூட்டத்தில் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட 9 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். எனினும், தோட்ட சேவையாளர் சங்கம் பங்கேற்கவில்லை.
இதனால் சம்பள உயர்வு தொடர்பில் சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை மீண்டும் கூடவுள்ளது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா அவசியம் என தொழிற்சங்கங்கள் யோசனை முன்வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.










