அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கும் எந்தவொரு திட்டமும் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை பொருத்தமான தரப்புகளுடன் மாத்திரமே குடியரசு முன்னணி கூட்டணி அமைக்கும் எனவும், நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களுடன் கூட்டணி வைக்கப்படமாட்டாது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.