சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை !

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் திகதியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இவ்வழக்கை நாளை மறுதினம் (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய துசித்த குமார மற்றும் வெலிக்கடை காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles