‘சர்வக்கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு’ – ஜனாதிபதியிடம் மைத்திரி உறுதி!

” சர்வக்கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தனவும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

சர்வக்கட்சி அரசு தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. சந்திப்பின் பின்னர் ஊடங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினரும் ஜனாதிபதியை இன்று சந்தித்து, சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக பேச்சு நடத்தினர்.

Related Articles

Latest Articles