தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசமைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சித் திட்டம் உள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நாட்டை மீட்பதற்கான வெளிப்படைதன்மைமிக்க சர்வக்கட்சி வேலைத்திட்டமே அவசியம். இது இந்த அரசுக்கு இன்னமும் தெளிவாக புரியவில்லை. அதனால்தான், வாருங்கள், அமைச்சு பதவிகளை பொறுப்பெடுங்கள், சர்வக்கட்சி அரசமைப்போம் என தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்படுகின்றது.
தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு நகர்வாகவே சர்வக்கட்சி அரசு எனும் சூழ்ச்சியை அரசு, வகுத்து வருகின்றது. மக்கள் கோரும் மாற்றம் இதுவல்ல, எனவே, மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு துணைபோக முடியாது.” – எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.