சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் 13 ஆவது திருத்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கட்சி தலைவர்களே முடிவெடுக்க வேண்டும் என இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
