சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் பங்கேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. விமல் அணியும் பங்கேற்கவுள்ளது.

எனினும், தாம் பங்கேற்கபோவதில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles