கடும் போக்குடைய சிங்கள தேசியவாத கட்சிகளும், அமைப்புகளும் அங்கம் வகிக்கும் சர்வஜனக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பெயரிடப்படவுள்ளார்.
மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“ ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்க எதிர்வரும் 4 ஆம் திகதி விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திலேயே முடிவு எடுக்கப்படும்.” – எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பஸில் வசம் அல்ல, ரணில் விக்கிரமசிங்க வசமே உள்ளது எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
