சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான சட்டமூலத்துக்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தை தொடர்ந்து அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை ஈரான் நிறுத்தியுள்ளது.
புதிய சட்டம் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுகளை தடுக்கிறது. அணுசக்தி நிலையத்தை அணுகுவதையும் தடுக்கிறது.
இது சர்வதேச அணுசக்தி மேற்பார்வையில ;இருந்து குறிப்பிடத்தக்க பின்வாங்கல். ஈரானின் இந்த முடிவு அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி எதிர்வினையாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் முறைப்பாடு முன்வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.