சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாதனை படைத்தது இங்கிலாந்து அணி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ஓட்டங்களை பெற்று, இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகள் பங்கேற்றுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வி ஆர் ஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 498 ஓட்டங்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

Related Articles

Latest Articles